Wednesday, March 17, 2010

கூகிள் தேடல் முடிவுகளை ஜிமெயிலில் இணைக்க

இந்த இடுகை ஜிமெயிலில் உள்ள ஒரு கூடுதல் வசதி பற்றியது. நீங்கள் மின்னஞ்சல் உபயோகிக்கும் போது ஏதாவது தகவலை தேட வேண்டும் என்றால் தனி பக்கத்தில் கூகுளை திறந்து தேவையானவற்றை தேடி கொண்டிருந்திருப்பீர்கள்.

தேடலில் உள்ள குறிப்பிட்ட முடிவை மின்னஞ்சலில் இணைக்க காப்பி செய்து மின்னஞ்சல் உள்ளே பேஸ்ட் செய்ய வேண்டி இருக்க வேண்டும். ஜிமெயிலில் ஒரு வசதி இந்த வேலையை மிகவும் எளிதாக்குகிறது. இந்த வசதியை உயிர்ப்பித்துக் கொள்ள உங்கள் ஜிமெயிலில் வலது மூலையில் உள்ள 'Settings' லிங்கை கிளிக் செய்து 'Labs' பகுதிக்கு சென்று கொள்ளுங்கள்.


லேப்ஸ் பகுதியில் கீழே வாருங்கள். 'Google Search' என்ற வசதியை கண்டுபிடித்து 'Enable' கிளிக் செய்து கொள்ளவும். அடுத்து 'Save Changes' கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள். உங்கள் ஜிமெயில் தானாக மீள் துவக்கப்படும். இப்போது இடது புறத்தில் Chat -க்கு கீழே Google Search வசதி தோன்றி இருக்கும்.


நீங்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கும் போது ஈமெயில் டூல்பாரில் புதிதாக ஒரு கூகிள் பட்டனை காணலாம். அதனை கிளிக் செய்து வேண்டியவற்றை ஜிமெயில் உள்ளேயே நீங்கள் தேடிக்கொள்ள முடியும். அதன் முடிவுகளில் உங்களுக்கு தேவையானவற்றை 'Send by email' என்பதனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சலில் எளிதாக இணைத்துக் கொள்ள முடியும்.

இனி மேல் உங்களுக்கு தேவையான விசயங்களை ஜிமெயில் உள்ளேயே தேடிக்கொள்ளுங்கள். ஜிமெயிலில் இந்த கூடுதல் வசதி சிலருக்கு பயன்படும்.

மென்பொருள்களை தேட உதவும் இணையதளம்


புதிய தேடியந்திரம் என்றாலே கூகுலுக்கு போட்டியாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. கூகுலை கொண்டே புதிய தேடியந்திரத்தை உருவாக்க முடியும்.அதாவது கூகுல் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது குறிப்பிட்ட நோக்கத்திலான தேடியட்ந்திரத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் கூகுல் துணையோடு தமிழில் மென்பொருள்களை தேட உதவும் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.அலக்சரேஷன் என்னும் வலைப்பதிவை நடத்திவரும் சகபதிவர்(காரல் மார்க்ஸ்)இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

மென்போர் என்னும் பெயரிலான இந்த தேடியந்திரம் மூலம் இணையத்தில் உள்ள தமிழ் மென்பொருளை தேட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ந‌ல்ல‌ முய‌ற்சி.மென்பொருளை ம‌ட்டுமே தேட‌ உத‌வும் த‌ள‌ம் ப‌ய‌ன் மிக்க‌து தான்.

ஆனால் இந்த‌ தேடிய‌ட்ந்திர‌த்தில் எப்ப‌டி தேடுவ‌து என்ப‌து தெளிவாக‌ குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை.தமிழில் டைப் செய்ய‌ வேண்டுமா,மென்பொருளின் பெய‌ர் தெரிந்திருக்க‌ வேண்டுமா போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் தெளிவு ப‌டுத்தினால் ந‌ன்றாக‌ இருக்கும்.

இணைய‌வாசிக‌ள் இந்த‌ தேடிய‌ந்திர‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி பார்த்து அத‌ன் குறை நிறைக‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.

http://menpor.axleration.com/